புதன், 17 மார்ச், 2010

த‌ய‌வுசெய்து... அடுத்த‌வ‌ர்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ ப‌க்க‌ங்க‌ளை ப‌டிக்காதீங்க‌...!

த‌ய‌வுசெய்து... அடுத்த‌வ‌ர்க‌ளின் அந்த‌ர‌ங்க‌ ப‌க்க‌ங்க‌ளை ப‌டிக்காதீங்க‌...!
ச‌மிப‌த்தில் எல்லாரையும் ஆச்ச‌ரிய‌த்தையும் அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்திய‌ ச‌ம்ப‌வ‌ம் நித்யான‌ந்தா+ர‌ஞ்சிதா ப‌டுக்கைய‌றை காட்சிக‌ள்தான்... இந்த‌ காட்சிக‌ள் சில‌ தொலைக்காட்சிக‌ளும்,ப‌த்திரிக்கைக‌ளும் உண்மையை வெளியிடுகிறோம் என்ற‌ பெய‌ரில் சுமார் 15நிமிட‌ம் ஓட‌க்கூடிய‌ ஆபாச‌ காட்சிக‌ள் நிறைந்த‌ காட்சிக‌ளை திரும்ப‌ திரும்ப‌ ஒளிப‌ர‌ப்பியும்,சில‌ ப‌த்திரிக்கைக‌ள் ப‌ல‌ ப‌க்க‌ங்க‌ள் அச்சிட்டு அம்ப‌ல‌ ப‌டுத்திய‌தும் நாம் எல்லாரும் அறிந்த‌தே... இந்த‌ ச‌ம்ப‌வ‌தில் நாம் மாத்தியோசிக்க‌.... வேண்டிய‌ விஷ‌ய‌ம் நிறைய‌ இருக்குது.


*முத‌ல்ல‌ ஆபாச‌ம் நிறைந்த‌ அந்த‌ (நித்யான‌ந்தா+ர‌ஞ்சிதா) காட்சிக‌ளை திரும்ப‌ திரும்ப‌ ஒளிப‌ர‌ப்பிய‌து ச‌ரியா? சில‌ திரைப்ப‌ட‌ங்க‌ளில் கூட‌ முத‌லிர‌வு காட்சிக‌ளை இர‌ண்டு ப‌ற‌வைக‌ள் அல்ல‌து இர‌ண்டு ம‌ல‌ர்க‌ள் முத்த‌மிடுவ‌து போல் நாக‌ரீக‌மான‌ காட்சிக‌ளை நாம் பாத்திருக்கிறோம் ஆனால் அன்று ஒளிப‌ர‌ப்பான‌ நித்யான‌ந்தாவின் காட்சிக‌ள் அந்த‌ர‌ங்க‌மாய் பார்க்க‌ வேண்டிய‌ ப்ளு ப்லிம் காட்சிக‌ளை அணைவ‌ரும் பார்க்க‌ கூடிய‌ ஒரு பொதுச்சேன‌லில் ஒளிப‌ர‌ப்பிய‌து ச‌ரியா?
*இர‌ண்டாவ‌து நாம யோசிக்க‌ வேண்டிய‌து, அடுத்த‌வ‌ர்க‌ளின் ப‌டுக்கைய‌றையினை ப‌ட‌ம் பிடிப்ப‌து ச‌ரியா? ஒருவ‌ருக்கு த‌னிப்ப‌ட்ட‌ முறையில் வ‌ருகிற‌ க‌டித‌த்தைக்கூட‌ அடுத்த‌வ‌ர்க‌ள் தெரியாம‌ல் ப‌டிப்ப‌து அநாக‌ரீக‌மான‌ செய‌லாய் ச‌முத‌ய‌த்தில் க‌ருதப்ப‌டுகிற‌து ஆனால், அடுத்த‌வ‌ர்க‌ளின் படுக்கைய‌றையினை ப‌ட‌ம்பிடித்த‌து நியாய‌மா?
*மூன்றாவ‌து நாம‌ யோசிக்க வேண்டிய‌ விஷ‌ய‌ம் ஒரு ந‌ன்மை, இருந்தால் ஒரு தீமையும்,இருக்கும் அது நாம் அறிந்த‌தே... அந்த‌ மாதிரி நித்யான‌ந்தா இதுவ‌ரை சொன்ன‌ ந‌ல்ல‌ க‌ருத்துக்க‌ளை ம‌ட்டும் எடுத்துக்கொண்டு தீய‌ செய‌ல்க‌ளை அப்ப‌டிய‌ ஒதிக்கிவைத்து விட்டு அவ‌ரையும் ம‌ற‌ந்து விட‌வ‌து ந‌ல்ல‌து. இதில் இருந்து நான் அறிந்து கொண்ட‌து இய‌ற்கைக்கு மாற‌ நாம் எந்த‌ விஷ‌ய‌த்தை செய்ய‌ முடிய‌து என்ப‌து நித்யான‌ந்தா விஷ‌ய‌த்தில் வெளிச்சமாயிருக்கிற‌து, எப்ப‌டின்னு யோசிக்கீங்க‌ளா இய‌ற்கையால் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ எல்ல‌ உயிரின‌ங்க‌ளுக்கும் செக்ஸ் உணர்வுக‌ள் உண்டு... இந்த‌ இய‌ற்கையான‌ உண‌ர்வுக‌ளை பிர‌ம்ம‌ச்ச‌ர்ய‌ம் என்று சொல்லி க‌ட்டுப‌டுத்த‌ முடியாது, வாய்ப்புக‌ள் கிடைக்காத‌ வரை எல்லாரும் பிர‌ம்ம‌ச்சாரிக‌ளை வாய்ப்புக‌ள் கிடைத்தால் எல்லாரும் நித்த‌ம் ஆன‌ந்தாக்க‌ளை....*நான் இப்ப‌டி எழுதுற‌த‌ல நித்யானந்தா செய்த‌ செய‌ல்க‌ளை நியாய‌ப்ப‌டித்த‌ வில்லை, நாண‌ய‌த்திற்க்கு எப்ப‌டி இருப‌க்க‌ங்க‌ள் இருக்கிற‌தோ அப்ப‌டித்தான் எல்லாருடைய‌ வாழ்க்கையிலும் அந்த‌ர‌ங்க‌ம் என்ற ப‌க்க‌ங்க‌ள் இருக்கும்... அந்த‌ ப‌க்க‌ங்க‌ளை அடுத்த‌வ‌ர்க‌ள் பார்ப்ப‌து அநாக‌ரீக‌மான‌து நீங்க‌ளை எது ச‌ரியான‌துன்னு யோசிங்க‌....

1 கருத்து:

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

மேற் கூறிய அத்தனை கருத்துக்களோடும் ஒத்து போகிறேன். என்று மாறப் போகிறோம் அடுத்தவரின் அந்தரங்கங்களை அலசுவதில் சுகம் காண்பதில் இருந்து.
followe enge panrathu unga blogla?