ஞாயிறு, 21 மார்ச், 2010

அர‌சிய‌ல்வாதிகாளுடைய‌ த‌வ‌றுக‌ளையும் த‌ய‌வுசெய்து ச‌ம‌மாக‌ பாருங்க‌ள்....



அர‌சிய‌ல்வாதிகாளுடைய‌ த‌வ‌றுக‌ளையும் த‌ய‌வுசெய்து ச‌ம‌மாக‌ பாருங்க‌ள்....பணமாலை க‌ட‌ந்த‌ வார‌ம் அர‌சிய‌லில் புய‌லை எற்படுத்திய‌து மாயாவதிக்கு போட‌ப்ப‌ட்ட‌ ப‌ண‌ மாலைதான். இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை கொஞ்ச‌ம் மாத்தியோசிச்சு பாருங்க‌.. எப்புடினா பொதுவா எங்க‌ கிராம‌ங்க‌ளிள் திருவிழாவில க‌ர‌காட்ட‌ம்,ஒயிலாட்ட‌ம்,ம‌யிலாட்ட‌ம்னு நிறையா கிராமிய‌ க‌லை நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ட‌க்கும், இதுல‌ க‌லை நிக‌ழ்ச்சில‌ சிற‌ப்பா ப‌ண்ணுற‌ க‌லைஞர்க‌ளுக்கு கிராம‌த்து இளசுக‌ள் எல்லாம் சேர்ந்து ப‌ண‌ மாலை போடுற‌து, இப்ப‌வும் வ‌ழக்க‌த்துல இருக்குது, இது ம‌ட்டும் இல்லாம‌ நிறையா க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளுக்கு எடைக்கு எடை நாணய‌ம், ப‌ண்ம்னு இதுக்கு முன்னாடி நிறையா கொடுத்திருக்காங்க‌... அப்ப‌லாம் ஏற்பட‌தா ச‌ர்ச்சை, இப்ப‌ மாயாவ‌திக்கு ம‌ட்டும் ஏற்படுற‌துக்கு கார‌ணம் என்ன‌? கொஞ்ச‌ம் யோசிங்க‌... சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்னாடி த‌மிழ‌க‌த்தோட முத‌ல்வ‌ர‌ செல்வி ஜெய‌ல‌லிதா அவ‌ர்கள் இருந்த போது ஒரு வ‌ளர்ப்பு ம‌க‌னைத்தேர்ந்தெடுத்து ஒரு மிக‌ப்பெரிய‌ ஆட‌ம்ப‌ர‌ திரும‌ண்த்தை ந‌ட‌த்திய‌து ந‌ம‌ எல்ல‌ருக்கும் தெரியும், ஆன‌ அப்ப‌ நட‌ந்த‌ இந்த‌ ஆட‌ம்ப‌ர‌ திரும‌ண‌த்தைப்ப‌ற்றி எந்த ஒருபிர‌ச்ச‌னையும் நாடாளும‌ன்ற‌த்தில் எழுப்ப‌ வில்லை, ஆன‌ இப்ப‌ மாயாவ‌திக்கு ம‌ட்டும் நாடாளும‌ன்ற‌த்தில் பெரிய‌ ச‌ர்ச்சை எற்படுவ‌துக்கு கார‌ணம் என்ன‌?.... கொஞ்ச‌ம் யோசிங்க‌...
அடுத்து "ர‌யில் ப‌ய‌ணங்க‌ளில் 3ம் வ‌குப்பில் ஆடு, மாடுக‌ள்தான் ப‌ய‌ணம் செய்யும்" என்று இந்திய‌ ம‌க்க‌ளை கேவ‌ல‌ப்ப‌டுத்தும் வித‌மா... வேற‌ நாட்டுக்கார‌ர் யாரும் சொல்ல‌ வில்லை,ந‌ம்ம‌ இந்திய‌ திருநாட்டின் அமைச்ச‌ராக‌ இருக்கும் ச‌சிசீ...தாரூர்...சொன்ன‌ க‌ருத்துக்கு லேச‌ ச‌ல‌ ச‌ல‌ப்போடு ம‌றைந்து போயிடுச்சு... ஆனா மாயாவ‌திக்கு போட‌ப்ப‌ட்ட‌ ப‌ண‌மாலையைப் ப‌ற்றி இன்னும் பெருசா புய‌ல‌ கிளப்பி விடுறாங்க‌ ...ஏன்? யோசிங்க‌ கொஞ்ச‌ம்..... ஏன்னா மாயாவ‌தி ஒரு த‌லித் பெண்ம‌ணி அத‌னால்தான்.. ஒரு த‌லித் இந்தியாவின் மிக‌ப்பெரிய‌ மாநில‌த்தின் முத‌ல்வ‌ர‌க‌ இருப்ப‌து உய‌ர்சாதியின‌ருக்கு பிடிக்க‌வில்லை, அத‌னால்தான் அவ‌ர் அடிக்க‌டி ச‌ர்ச்சையில் சிக்கி விடுகிறார். அவ‌ர் ப‌ண்ணுகிற‌ செய‌ல்க‌ளை ச‌ர்ச்சைக்குள்ளாகிற‌து. ஆனா உய‌ர்சாதி அர‌சிய‌ல்வாதிக‌ள் ப‌ண்ணுகிற‌ பெரிய‌ த‌வ‌றுக‌ள் மறைக்க‌ப்ப‌டுகிற‌து.இதைச்சொல்வ‌தால் நான் மாயாவ‌தியால் ஏற்படுகிற‌ ச‌ர்ச்சைகளை நியாய‌ப்ப‌டுத்த‌விலை, எல்லா அர‌சிய‌ல்வாதிகாளுடைய‌ த‌வ‌றுக‌ளையும் த‌ய‌வுசெய்து ச‌ம‌மாக‌ பாருங்க‌ள்....

கருத்துகள் இல்லை: