போலி மருந்து,மாத்திரைகளை விற்பனை செய்தவர்களை கண்டுபிடிச்சு கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துவருவது பாரட்டும் படி இருந்தாலும், நாம இதுல யோசிக்க வேண்டியது என்னன மருந்து மாத்திரைகள் தரமானதா என்பதை ஆராய்வதற்க்கு, தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள், இந்த அதிகாரிகள் மாதம் தோறும் மருந்து மாத்திரைகள் விற்பனை நடக்கிற கடைகளில் ஆய்வு நடத்தி இருந்தால், இவ்வளவு போலி மருந்துகள் விற்பனையாகி இருக்காது, பல உயிர்கள் பலியாகியும் இருக்காது,போலி மருந்து மாதிரி எந்த ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகே அரசு அதிகாரிகள் அதிரடியாக செயல்படுகிறார்கள். இந்த அதிரடி நடவடிக்கைகளை மாதம் தோறும் செயல்படுத்தினாலே போதும்,பெரிய தவறுகள் நடக்க விடாமல் தவிக்கலாம்! இது எல்லாத்துறை அதிகாரிகளுமே கடைபிடிக்க வேண்டிய ஒன்று, இது அவர்களின் கடமையும் பணியும் கூட, இனிமேலாவது அதிகாரிகள் பணிகளை சரியாக செய்வார்களா? அதிகாரிகள் அவர்கள் பாணியே செய்தாலே அசம்பாவிதம் எதுவும் நடக்காது!
புதன், 31 மார்ச், 2010
வியாழன், 25 மார்ச், 2010
எல்லாம் நம் பார்வையில் தான்...
எல்லாம் நம் பார்வையில் தான்...

நாம் பார்க்கும் பார்வையில்தான் நம் எண்ணங்கள் அமைகிறது. வியட்நாம் போர் நாடந்த சமயம் அமெரிக்கர்கள் வியட்நாம் வீரர்களைக் கொன்று குத்தனர். போரின் விளைவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள அரசாங்கம் இரண்டு தளபதிகளை அனுப்பை அறிக்கை தயார் செய்யச் சொன்னது. போரின் அவலத்தையும், மரணத்தையும் பார்க்க சகிக்காமல் மனம் உடைந்து ஒரு தளபதி தற்கொலை செய்துக் கொண்டார்.ம்ற்றொருவர் இத்தனை சோகங்களுக்கும் முன்னால் தன் கவலையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று மன எழுச்சி பெற்று,ஊர் திரும்பியதும் இதனையே எல்லோரிடமும் பேசிப் பேசி பெரும் பேச்சாளராகி விட்டார். அதன் மூலம் பணக்காரராகவும் ஆகிவிட்டார். நம் பார்வையில் தானே எல்லாம் இருக்கிறது.... எதையும் மாத்தியோசிச்சு பாருங்கள்!

நாம் பார்க்கும் பார்வையில்தான் நம் எண்ணங்கள் அமைகிறது. வியட்நாம் போர் நாடந்த சமயம் அமெரிக்கர்கள் வியட்நாம் வீரர்களைக் கொன்று குத்தனர். போரின் விளைவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள அரசாங்கம் இரண்டு தளபதிகளை அனுப்பை அறிக்கை தயார் செய்யச் சொன்னது. போரின் அவலத்தையும், மரணத்தையும் பார்க்க சகிக்காமல் மனம் உடைந்து ஒரு தளபதி தற்கொலை செய்துக் கொண்டார்.ம்ற்றொருவர் இத்தனை சோகங்களுக்கும் முன்னால் தன் கவலையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று மன எழுச்சி பெற்று,ஊர் திரும்பியதும் இதனையே எல்லோரிடமும் பேசிப் பேசி பெரும் பேச்சாளராகி விட்டார். அதன் மூலம் பணக்காரராகவும் ஆகிவிட்டார். நம் பார்வையில் தானே எல்லாம் இருக்கிறது.... எதையும் மாத்தியோசிச்சு பாருங்கள்!
செவ்வாய், 23 மார்ச், 2010
ஞாயிறு, 21 மார்ச், 2010
அரசியல்வாதிகாளுடைய தவறுகளையும் தயவுசெய்து சமமாக பாருங்கள்....

அரசியல்வாதிகாளுடைய தவறுகளையும் தயவுசெய்து சமமாக பாருங்கள்....பணமாலை கடந்த வாரம் அரசியலில் புயலை எற்படுத்தியது மாயாவதிக்கு போடப்பட்ட பண மாலைதான். இந்த சம்பவத்தை கொஞ்சம் மாத்தியோசிச்சு பாருங்க.. எப்புடினா பொதுவா எங்க கிராமங்களிள் திருவிழாவில கரகாட்டம்,ஒயிலாட்டம்,மயிலாட்டம்னு நிறையா கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கும், இதுல கலை நிகழ்ச்சில சிறப்பா பண்ணுற கலைஞர்களுக்கு கிராமத்து இளசுகள் எல்லாம் சேர்ந்து பண மாலை போடுறது, இப்பவும் வழக்கத்துல இருக்குது, இது மட்டும் இல்லாம நிறையா கட்சித்தலைவர்களுக்கு எடைக்கு எடை நாணயம், பண்ம்னு இதுக்கு முன்னாடி நிறையா கொடுத்திருக்காங்க... அப்பலாம் ஏற்படதா சர்ச்சை, இப்ப மாயாவதிக்கு மட்டும் ஏற்படுறதுக்கு காரணம் என்ன? கொஞ்சம் யோசிங்க... சில ஆண்டுகளுக்கு முன்னாடி தமிழகத்தோட முதல்வர செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்த போது ஒரு வளர்ப்பு மகனைத்தேர்ந்தெடுத்து ஒரு மிகப்பெரிய ஆடம்பர திருமண்த்தை நடத்தியது நம எல்லருக்கும் தெரியும், ஆன அப்ப நடந்த இந்த ஆடம்பர திருமணத்தைப்பற்றி எந்த ஒருபிரச்சனையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப வில்லை, ஆன இப்ப மாயாவதிக்கு மட்டும் நாடாளுமன்றத்தில் பெரிய சர்ச்சை எற்படுவதுக்கு காரணம் என்ன?.... கொஞ்சம் யோசிங்க...
அடுத்து "ரயில் பயணங்களில் 3ம் வகுப்பில் ஆடு, மாடுகள்தான் பயணம் செய்யும்" என்று இந்திய மக்களை கேவலப்படுத்தும் விதமா... வேற நாட்டுக்காரர் யாரும் சொல்ல வில்லை,நம்ம இந்திய திருநாட்டின் அமைச்சராக இருக்கும் சசிசீ...தாரூர்...சொன்ன கருத்துக்கு லேச சல சலப்போடு மறைந்து போயிடுச்சு... ஆனா மாயாவதிக்கு போடப்பட்ட பணமாலையைப் பற்றி இன்னும் பெருசா புயல கிளப்பி விடுறாங்க ...ஏன்? யோசிங்க கொஞ்சம்..... ஏன்னா மாயாவதி ஒரு தலித் பெண்மணி அதனால்தான்.. ஒரு தலித் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வரக இருப்பது உயர்சாதியினருக்கு பிடிக்கவில்லை, அதனால்தான் அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி விடுகிறார். அவர் பண்ணுகிற செயல்களை சர்ச்சைக்குள்ளாகிறது. ஆனா உயர்சாதி அரசியல்வாதிகள் பண்ணுகிற பெரிய தவறுகள் மறைக்கப்படுகிறது.இதைச்சொல்வதால் நான் மாயாவதியால் ஏற்படுகிற சர்ச்சைகளை நியாயப்படுத்தவிலை, எல்லா அரசியல்வாதிகாளுடைய தவறுகளையும் தயவுசெய்து சமமாக பாருங்கள்....
புதன், 17 மார்ச், 2010
தயவுசெய்து... அடுத்தவர்களின் அந்தரங்க பக்கங்களை படிக்காதீங்க...!
தயவுசெய்து... அடுத்தவர்களின் அந்தரங்க பக்கங்களை படிக்காதீங்க...! 
சமிபத்தில் எல்லாரையும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்திய சம்பவம் நித்யானந்தா+ரஞ்சிதா படுக்கையறை காட்சிகள்தான்... இந்த காட்சிகள் சில தொலைக்காட்சிகளும்,பத்திரிக்கைகளும் உண்மையை வெளியிடுகிறோம் என்ற பெயரில் சுமார் 15நிமிடம் ஓடக்கூடிய ஆபாச காட்சிகள் நிறைந்த காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பியும்,சில பத்திரிக்கைகள் பல பக்கங்கள் அச்சிட்டு அம்பல படுத்தியதும் நாம் எல்லாரும் அறிந்ததே... இந்த சம்பவதில் நாம் மாத்தியோசிக்க.... வேண்டிய விஷயம் நிறைய இருக்குது.

*முதல்ல ஆபாசம் நிறைந்த அந்த (நித்யானந்தா+ரஞ்சிதா) காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பியது சரியா? சில திரைப்படங்களில் கூட முதலிரவு காட்சிகளை இரண்டு பறவைகள் அல்லது இரண்டு மலர்கள் முத்தமிடுவது போல் நாகரீகமான காட்சிகளை நாம் பாத்திருக்கிறோம் ஆனால் அன்று ஒளிபரப்பான நித்யானந்தாவின் காட்சிகள் அந்தரங்கமாய் பார்க்க வேண்டிய ப்ளு ப்லிம் காட்சிகளை அணைவரும் பார்க்க கூடிய ஒரு பொதுச்சேனலில் ஒளிபரப்பியது சரியா?
*இரண்டாவது நாம யோசிக்க வேண்டியது, அடுத்தவர்களின் படுக்கையறையினை படம் பிடிப்பது சரியா? ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் வருகிற கடிதத்தைக்கூட அடுத்தவர்கள் தெரியாமல் படிப்பது அநாகரீகமான செயலாய் சமுதயத்தில் கருதப்படுகிறது ஆனால், அடுத்தவர்களின் படுக்கையறையினை படம்பிடித்தது நியாயமா?
*மூன்றாவது நாம யோசிக்க வேண்டிய விஷயம் ஒரு நன்மை, இருந்தால் ஒரு தீமையும்,இருக்கும் அது நாம் அறிந்ததே... அந்த மாதிரி நித்யானந்தா இதுவரை சொன்ன நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு தீய செயல்களை அப்படிய ஒதிக்கிவைத்து விட்டு அவரையும் மறந்து விடவது நல்லது. இதில் இருந்து நான் அறிந்து கொண்டது இயற்கைக்கு மாற நாம் எந்த விஷயத்தை செய்ய முடியது என்பது நித்யானந்தா விஷயத்தில் வெளிச்சமாயிருக்கிறது, எப்படின்னு யோசிக்கீங்களா இயற்கையால் படைக்கப்பட்ட எல்ல உயிரினங்களுக்கும் செக்ஸ் உணர்வுகள் உண்டு... இந்த இயற்கையான உணர்வுகளை பிரம்மச்சர்யம் என்று சொல்லி கட்டுபடுத்த முடியாது, வாய்ப்புகள் கிடைக்காத வரை எல்லாரும் பிரம்மச்சாரிகளை வாய்ப்புகள் கிடைத்தால் எல்லாரும் நித்தம் ஆனந்தாக்களை....*நான் இப்படி எழுதுறதல நித்யானந்தா செய்த செயல்களை நியாயப்படித்த வில்லை, நாணயத்திற்க்கு எப்படி இருபக்கங்கள் இருக்கிறதோ அப்படித்தான் எல்லாருடைய வாழ்க்கையிலும் அந்தரங்கம் என்ற பக்கங்கள் இருக்கும்... அந்த பக்கங்களை அடுத்தவர்கள் பார்ப்பது அநாகரீகமானது நீங்களை எது சரியானதுன்னு யோசிங்க....
செவ்வாய், 16 மார்ச், 2010
மாத்தியோசிங்க..!

மாத்தியோசிங்க..!
எனத்த மாத்தியோசிக்க...ன்ணு நினைக்கிறேங்களா நம்ம வாழ்க்கையில நடக்கிற எல்லா சம்பவங்களையும் ஓரே கண்ணேட்டத்தோட பார்க்காம மாத்தியோசிச்சு பாருங்க உண்மை புரியும் அதாவது.. "கண்னால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதை மெய்" என்ற பொன்மொழி மாதிரி உலகில் நடக்கிற சம்பவங்களின் மறுபக்கம் தான் மாத்தியோசிங்க...!
எனத்த மாத்தியோசிக்க...ன்ணு நினைக்கிறேங்களா நம்ம வாழ்க்கையில நடக்கிற எல்லா சம்பவங்களையும் ஓரே கண்ணேட்டத்தோட பார்க்காம மாத்தியோசிச்சு பாருங்க உண்மை புரியும் அதாவது.. "கண்னால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதை மெய்" என்ற பொன்மொழி மாதிரி உலகில் நடக்கிற சம்பவங்களின் மறுபக்கம் தான் மாத்தியோசிங்க...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


