போலி மருந்து,மாத்திரைகளை விற்பனை செய்தவர்களை கண்டுபிடிச்சு கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துவருவது பாரட்டும் படி இருந்தாலும், நாம இதுல யோசிக்க வேண்டியது என்னன மருந்து மாத்திரைகள் தரமானதா என்பதை ஆராய்வதற்க்கு, தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள், இந்த அதிகாரிகள் மாதம் தோறும் மருந்து மாத்திரைகள் விற்பனை நடக்கிற கடைகளில் ஆய்வு நடத்தி இருந்தால், இவ்வளவு போலி மருந்துகள் விற்பனையாகி இருக்காது, பல உயிர்கள் பலியாகியும் இருக்காது,போலி மருந்து மாதிரி எந்த ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகே அரசு அதிகாரிகள் அதிரடியாக செயல்படுகிறார்கள். இந்த அதிரடி நடவடிக்கைகளை மாதம் தோறும் செயல்படுத்தினாலே போதும்,பெரிய தவறுகள் நடக்க விடாமல் தவிக்கலாம்! இது எல்லாத்துறை அதிகாரிகளுமே கடைபிடிக்க வேண்டிய ஒன்று, இது அவர்களின் கடமையும் பணியும் கூட, இனிமேலாவது அதிகாரிகள் பணிகளை சரியாக செய்வார்களா? அதிகாரிகள் அவர்கள் பாணியே செய்தாலே அசம்பாவிதம் எதுவும் நடக்காது!
புதன், 31 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



2 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள்
ரைட்டு
கருத்துரையிடுக